சினிமா

வரும் பொங்கலுக்கு சன் டிவியில் என்ன திரைப்படம் தெரியுமா? மொத்தம் 7 படங்கள்!

Summary:

Pongal special movies in sun tv

முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் மட்டுமே திரைப்படங்கள் அதிகம் வெளியாகின. ஆனால் தற்போது வாரத்திற்கு நான்கு படங்கள் வெளியாகிறது. முன்பெல்லாம் 100 நாட்களை தாண்டி ஓடும் திரைப்படங்களே வெற்றி படங்களாக கருதப்படும். ஆனால் தற்போது 4 நாட்கள் ஓடினாலே படம் வெற்றிப்படமாக பார்க்கப்படுகிறது.

மேலும் திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. முன்பெல்லாம் புதிதாக வெளியான படங்களை பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகளில் மட்டுமே மக்கள் பார்த்து வந்தனர்.

பண்டிகை நாட்கள் வந்தாலே தொலைக்காட்சியில் என்ன திரைப்படம் வர போகிறது என்று ஒரு வாரத்திற்கு முன்பே மக்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள். பண்டிகை, புது திரைப்படம் இதற்கெல்லாம் பெயர்போனது சன் டிவி.

தொழில்நுட்ப வளர்ச்சி, ஸ்மார்ட் போன், இன்டர்நெட், மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் வந்தபிறகு தொலைக்காட்சியில் படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், வரும் பொங்கலை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு புது புது திரைப்படங்களை ஒளிபரப்புகிறது சன் டிவி. வரும் செவ்வாய் காலை 11 மணிக்கு VIP 2, 
செவ்வாய் மாலை 6.30 மணிக்கு சண்டக்கோழி 2 , புதன் காலை 11 மணிக்கு ராட்சசன், மதியம் 3 மணிக்கு சிங்கம், புதன் மாலை 6.30 க்கு தெறி, மேலும் வரும் வியாழன் காலை 11 மணிக்கு குலேபகாவலி, மதியம் 3 மணிக்கு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


Advertisement