இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் மீது போலீசில் அதிரடி புகார்! ஏன்? என்ன காரணம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் மீது போலீசில் அதிரடி புகார்! ஏன்? என்ன காரணம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!


police-case-filed-against-ar-rahman

உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் ஹிந்திக்கு ஆதரவாகப் பேசி இருந்தார். மேலும் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் கடும் கண்டனம் கிளம்பியது.

இதற்கிடையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழன்னையின் ஓவியம் ஒன்றை சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் தமிழன்னையை அழகாக வரையாமல் தலைவரி கோலமாக வரைந்துள்ளார் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

AR Rahman

மேலும் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் நிர்வாகியான முத்துரமேஷ் நாடார் என்பவர் ஆன்லைனில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் உலகில் பல்வேறு நாடுகளிலும் தமிழர்கள், தமிழன்னைக்கு கோவில் கட்டி, அழகாக சிலையமைத்து தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மேலும் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேலை, குண்டலகேசி, வளையாபதி போன்ற பல்வேறு வரலாற்று நூல்கள் தமிழன்னையின் கைகளில் செங்கோல்களாய் காட்சியளிக்கும்.

ஆனால், இசையமைப்பாளர் ரஹ்மான் தமிழன்னை தலைவிரி கோலத்துடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயல். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாராம். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.