சினிமா

பயங்கர மாடர்னாக மாறிய பேட்ட பட நடிகை! லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

Summary:

Petta movie actress malavika mohanan latest modern look photos

மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். மலையாளம், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என பயங்கர பிசியாக இருந்த இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக முக்கிய கதாத்திரத்தில் நடித்திருந்தார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்கா, விஜய் சேதுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் ஒருசில காட்சிகளே நடித்திருந்தாலும் அவரது காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது. மேலும், பேட்ட படத்தில் குடும்ப பெண்ணாக பார்ப்பதற்கு கிராமத்து பெண் போல் காட்சியளித்திருந்தார் மாளவிகா.

இந்நிலையில் தனது பயங்கர மாடர்னான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அந்த பெண்ணா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement