சினிமா

தமிழ் திரையுலகில் புதிய மைல்கல்லை தொட்ட ரஜினியின் பேட்ட!

Summary:

Petta collection crossed 60 crore in tn

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியான பேட்ட திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 60 கோடி வசூல் செய்துள்ளது. 

ரஜினி அரசியலில் தடம்பதித்த பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். 1980களில் தொடர்ந்து நடித்தது போலவே ரஜினி இப்போது நடித்து வருகிறார். இந்த வயதிலும் அவரால் இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடிக்க முடிகிறது. 

இந்த வகையில் அடுத்தடுத்து காலா, 2.0, பேட்ட என ரஜினியின் படங்கள் வெளியாகின. பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம் படத்துடன் வெளியாகிய ரஜினியின் பேட்ட திரைப்படம் தமிழக திரையரங்குகளில் மட்டும் தற்பொழுது 60 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாம். 

தமிழகத்தில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் படம் 2010ல் வளியான ரஜினியின் எந்திரன். பின்னர் பாகுபலி 2, அதன்பிறகு விஜய்யின் மெர்சல் மற்றும் சர்கார் திரைப்படங்கள் அடுத்தடுத்து இந்த மைல்கல்லை எட்டின. அடுத்து ரஜினியின் 2.0 இந்த வரிசையில் இடம் பிடித்தது. 

இந்த ஆண்டு முதலில் 60 கோடி வசூல் செய்த படம் அஜித்தின் விஸ்வாசம். தற்பொழுது தமிழக திரையரங்குகளில் 60 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்த மைல்கல்லை ரஜினியின் பேட்ட திரைப்படமும் எட்டியுள்ளதாம். 


Advertisement