வெளியீட்டுக்கு முன்பே விஸ்வாசத்தை முந்தி வசூல் குவித்த பேட்ட!

petta collection


petta collection


கனடா பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரஜினியின் பேட்ட படம் தான் அதிக வசூல் குவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் சூப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. 

இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், சனந்த் ஷெட்டி, ஆடுகளம் நரேன், குரு சோமசுந்தரம், யோகி பாபு, சசிகுமார், விவேக் பிரசன்னா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. 

  
இதனையடுத்து இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள விஸ்வாசம் படமும் வரும் 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, ஜெகபதி பாபு, பேபி அனிகா, ரமேஷ் திலக், நாராயண் லக்கி, விஜய், விவேக் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். 


இந்த நிலையில், கனடாவில் 3 பகுதிகளில் 9 காட்சிகளின் மூலம் படம் வெளியாவதற்கு முன் விற்பனையில் ரூ. 11,71,490.75 வரையில் வசூல் செய்துள்ளது. அதேபோல் விஸ்வாசம் 3 பகுதிகளில் 7 காட்சிகளின் மூலம் ரூ.4,30,279வரையில் வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாக்க உள்ளன.