சிம்புவின் தம்பி குறளரசனுக்கு இப்படி ஒரு நிலைமையா? நீங்களே பாருங்க!

People reaction for kuralarsan twit about ajith


People reaction for kuralarsan twit about ajith

இந்தியா  முழுவதும் வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்நிலையில் அணைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தோழமை கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, போட்டியிடும் இடம் குறிதுஹ் விவாதித்து வருகிறது. அதே நேரத்தில்  பலரும் சிலரை முன்வைத்து அரசியலுக்கு வருமாறு அழைக்கிறார்கள்.

சமீபத்தில் பிரபல இயக்குனர் சுசீந்திரன், அஜித்தை அரசியலுக்கு வாருங்கள் என டுவிட் போட்டிருந்தார். அந்த டிவ்ட் சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டானது. இந்நிலையில் அந்த பதிவுக்கு கீழே நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் என்ற பெயரில், எங்க அப்பாதான் அடுத்த முதல்வர் என்று ட்வீட் வந்திருந்தது.

simbu

அதுமட்டும் இல்லாமல், தீபா பேரவையோடு சேர்ந்து லட்சிய தி.மு.க 234 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் ட்வீட்டுகள் வந்திருந்தன.

இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியது, மேலும் இது குறித்து குறளரசன் மீது பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தது. பிறகு தான் தெரிகிறது அவரது பெயரில் இருக்கும் போலி அக்கவுண்ட் அது என்று. சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இதுபற்றி கூறியுள்ளார் குறளரசன்.