தியேட்டரில் திரைப்படத்தைப் பார்த்து பயந்து ஓடிய மக்கள்.. எந்த திரைப்படத்திற்கு தெரியுமா.?
தியேட்டரில் திரைப்படத்தைப் பார்த்து பயந்து ஓடிய மக்கள்.. எந்த திரைப்படத்திற்கு தெரியுமா.?

தமிழ் திரை உலகில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் கலைப் புலி s.தானு. இவர் 80களில் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை பல திரைப்படங்களை தயாரித்து வெற்றியை கண்டு வருகிறார்.
இவர் தயாரிப்பில் வெளியான கிழக்கு சீமையிலே, கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், காக்க காக்க, துப்பாக்கி, தெறி, கந்தசாமி, கபாலி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் ஆகியது.
மேலும், கலைப்புலி s.தானு தயாரிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'யார்' இப்படத்தில் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்தார். நளினி, ஜெய்சங்கர், ரஜினிகாந்த் போன்ற முக்கிய நட்சத்திரங்களும் நடித்து வந்தனர். இப்படம் மிகப்பெரிய ஹிட்டானது.
இதுபோன்ற நிலையில் 'யார்' திரைப்படம் வெற்றி பெற்றதற்கான முக்கிய காரணத்தை தற்போது பேட்டியில் பகிர்ந்துள்ளார் தானு. இந்தத் திரைப்படம் பேய் படம் என்று யாரும் திரையரங்கிற்கு வந்து பார்க்கவில்லை. பார்த்தவர்களும் பாதியில் ஓடிவிட்டனர். இதன் பிறகு தூர்தர்ஷனில் இப்படத்தின் இறுதியில் சாமி பாடல் வரும். அதை ஒளிபரப்ப சொன்னதால் இதை பார்த்துவிட்டு மக்கள் தியேட்டருக்கு வந்தனர். இதன்பிறகே இப்படம் ஹிட்டானது என்று கூறினார்.