என்னது.. அமீரின் காதலுக்கு பச்சை கொடி காட்டிட்டாரா பாவனி! அவர் கூறியதை பார்த்தீர்களா! வைரல் வீடியோ!!pavani-talk-about-ameer-in-bigboss-jodikal-show

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு தனது க்யூட்டான சிரிப்பால், செயலால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் பாவனி. நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற அவர் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

பாவனி இதற்கு முன்பு பல சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலின் மூலம் பெருமளவில் பிரபலமானார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளரான அமீர் அவருடன் நெருங்கி பழகினார். மேலும் முத்த சர்ச்சையும் அரங்கேறியது. தற்போது இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்துகொண்டுள்ளனர். 

பிக்பாஸ் வீட்டில் மட்டுமின்றி பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் அமீர் பாவனி மீது தனக்கிருக்கும் விருப்பத்தை நேரடியாக தெரிவித்துள்ளார்.  ஆனால் பாவனி அவருடன் பழகி வந்தாலும் முடிவாக எந்த பதிலையும் கூறவில்லை. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் ப்ரோமோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் டாஸ்க் ஒன்றில், பாவனி அமீர் குறித்த கேள்விக்கு, அமீரை எனக்கு பிடிக்கும். ஆனா கொஞ்சம் டைம் வேணும் என கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அமீர் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் அமீரின் காதலுக்கு பச்சைகொடி காட்டிவிட்டாரா??என ஆவலுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.