வேற லெவல்.. அமீருக்கு குடும்பத்தினர் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்! பொறாமையில் பாவனி! வைரல் வீடியோ!!

வேற லெவல்.. அமீருக்கு குடும்பத்தினர் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்! பொறாமையில் பாவனி! வைரல் வீடியோ!!


Pavani family gifted watch to ameer video  viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் ஜோடிகள். இதில் பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்து கொண்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இதில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் நடுவர்களாக உள்ளனர்.

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி இருவரும் இணைந்து நடனமாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அமீர் தான் காதலிப்பதாக பாவனியிடம் தெரிவித்திருந்தார். அதற்கு பாவனி யோசித்து ஒத்துகொள்ள தனக்கு டைம் வேணும் என கூறியிருந்தார். இந்த நிலையில் அவர்கள் இந்த வாரம் கண்ணா நீ தூங்கடா என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.

மேலும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு பாவனியின் குடும்பத்தினர்கள் சர்ப்ரைஸாக வருகை தந்திருந்தனர். மேலும் விலையுயர்ந்த கை கடிகாரம் ஒன்றையும் அமீருக்கு பரிசாக அளித்துள்ளனர். இதனை கண்டு பாவனி பொறாமையில் பொங்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.