சினிமா வீடியோ

டபுள் ஆக்சன்! பட்டைய கிளப்பும் பட்டாஸ் பட டிரைலர்! செம உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

Summary:

pattas movie trailer released

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது கொடிப்பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் தனுஷ் தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் புதுப்பேட்டை படத்திற்கு பிறகு நடிகை சினேகா தனுஷுடன் இணைந்துள்ளார். இவர்களுடன் மெஹ்ரின்,  பிர்ஜதா, நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தொடர்புடைய படம்

 சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க விவேக்- மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். மேலும் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது அப்படத்தின் ட்ரெய்லரை பட குழு வெளியிட்டுள்ளது. 


Advertisement