ஆண்டவரே.. வேற லெவல்! சும்மா பட்டையை கிளப்பும் விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடல்!

ஆண்டவரே.. வேற லெவல்! சும்மா பட்டையை கிளப்பும் விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடல்!



pathala-pathala-song-release

தமிழ் சினிமாவில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களை 
இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இதில் கதாநாயகனாக உலகநாயகன் கமல் நடித்துள்ளார். 

மேலும் இதில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், பிக்பாஸ் ஷிவானி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்ரம் படத்தை ராஜ் கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இந்த திரைப்படம் ஜூன் 3ம் தேதி ரிலீசாகவுள்ளது. மேலும் படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வரும் மே 15-ம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் கமல் பாடியுள்ள ‘பத்தல பத்தல' என்ற பாடல் ரிலீஸாகி பட்டையை கிளப்பி வருகிறது. இதில் கமல் லோக்கல் ஸ்லாங்கில் இறங்கி குத்தியுள்ளார்.