உன் பார்வையில்.. பிக்பாஸ் கணேஷுக்கு ஜோடியாகும் பிரபல அஜித் பட நடிகை! யார்னு பார்த்தீர்களா!!

தமிழில் திரிஷா நடிப்பில் வெளிவந்த அபியும் நானும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம்


parvathy-nair-pair-to-ganesh-venkatraman

தமிழில் திரிஷா நடிப்பில் வெளிவந்த அபியும் நானும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். அதனை தொடர்ந்து அவர் உன்னைபோல் ஒருவன், கோ, இவன் வேறமாதிரி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டு இறுதி வாரம் வரை சென்று ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். 

இவரது மனைவி நிஷாவும் சின்னத்திரை நடிகர் ஆவார். இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன் தற்போது உன் பார்வையில் என்ற படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்த படத்தை பாலிவுட் ஒளிப்பதிவாளர் கபிர் லால் இயக்குகிறார்.

ganesh venkatraman

மேலும் தமிழ், தெலுங்கு, மராட்டி, பெங்காலி போன்ற பல மொழிகளிலும் தயாராகும் இப்படத்தில் கணேஷுக்கு ஜோடியாக நடிகை பார்வதி நாயர் நடிக்கிறார்.
இதில் கணேஷ் வெங்கட்ராம் சைக்காலாஜிஸ்டாகவும், பார்வதி நாயர் தொழிலதிபராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. பார்வதி நாயர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.