விரைவில் தேர்வாகும்.. திடீரென ஹேப்பியாக ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் பார்த்திபன்! ஏன், என்ன காரணம் தெரியுமா?

விரைவில் தேர்வாகும்.. திடீரென ஹேப்பியாக ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகர் பார்த்திபன்! ஏன், என்ன காரணம் தெரியுமா?


parthiban-thank-to-fans-who-answered-her-question

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கும் பார்த்திபன் எழுதி, இயக்கி, ஒரே ஆளாக நடித்திருந்த திரைப்படம் ஒத்தசெருப்பு சைஸ் 7. இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த படத்திற்கு பின்னணி இசையை இசையமைப்பாளர் சி.சத்யாவும், மேலும் ஒரு பாடலை சந்தோஷ் நாராயணனும் இசையமைத்துள்ளனர். ஒத்த செருப்பு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. 

 மேலும் இந்த படம் ஆசிய சாதனைகள் புத்தகத்திலும், இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது. மேலும் சர்வதேச அளவிலும் பல விருதுகளை வென்றுள்ளது. அதனை தொடர்ந்து நடிகர் பார்த்திபன் இப்படத்தை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அவர் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒத்த செருப்பு சைஸ் 7 ஹிந்தியில் என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்... என பதிவிட்டிருந்தார்.

அதற்கு பலரும் ஆர்வமாக பதில் அளித்திருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு நன்றி கூறி நடிகர் பார்த்திபன், "புதிதாய் இன்று பிறக்கிறோம், எளிதாய் சிரமம் கடக்கிறோம். பெரிதாய் வாழ்வில் சாதிக்கிறோம். ஹிந்தி தலைப்பு -அள்ளி வழங்கிய, எண்ணிலடங்கா -எதிர்பாரா கோணங்களில். பலரது பாராட்டுக்குரியது, சிலது சிறப்பு! அனைத்தும் பரிசீலனையில். விரைவில் தேர்வாகும். பங்குக் கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி!" என மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.