நான் பதவியை ராஜினாமா செய்ய அந்த இரு நடிகர்கள் செய்த அவமானம்தான் காரணம்! ஆவேசமான பார்த்திபன்.!

நான் பதவியை ராஜினாமா செய்ய அந்த இரு நடிகர்கள் செய்த அவமானம்தான் காரணம்! ஆவேசமான பார்த்திபன்.!


parthiban-talk-about-ilayaraja-75

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் பார்த்திபன் விஷாலுக்கு ஆதரவாக இருந்ததால், சமீபத்தில் சங்கத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார்.

ஆனால் பல காரணங்களால் நிகழ்ச்சிக்கு முன்பாக பார்த்திபன் பதவியை ராஜினாமா செய்தார் மேலும் இளையராஜா 75  நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இது திரையுலகில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. 

      parthiban

இந்நிலையில் இதுகுறித்து பார்த்திபன் கூறியதாவது:-
நான் இளையராஜாவின் தீவிர பக்தன். அதனால் விஷால்  இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். மேலும் ரஹ்மானிடம் தான் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறி சம்மதம் வாங்கினேன்.  மேலும் நிகழ்ச்சிக்கான ஸ்கிரிப்ட் எழுதி ஒன்று வைத்து இருந்தேன்.

ஆனால் திடீரென நடிகர் ரமணா ஸ்கிரிப்ட் தயார் செய்கிறார்  நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம் என்று கூறினார்கள். மேலும் நிகழ்ச்சி அன்று காலை நான் ஒரு பெண் நிகழ்ச்சி தொகுப்பாளரை அவசரமாக ஏற்பாடு செய்தபிறகு நந்தா ‘வேண்டாம். நான் சொல்லிவிட்டேன்’ என்று திடீர் என்று கூறினார்.

parthiban

மேலும் அவர்கள் நான் நிகழ்ச்சியில் தலையிடுவதை ரமணா மற்றும் நந்தா விரும்பவில்லை. அதுமட்டுமின்றி டிரம்ஸ் சிவமணி ஒப்புக்கொண்ட ஒரு நிகழ்ச்சியை கேன்சல் செய்ய சொல்லி இந்த விழாவில் கலந்துகொள்ள கேட்டேன்.  ஆனால் அதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மேலும் விஷால் ஒரு வார்த்தை கூட  அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை. நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு என்னை ஓரமாக உட்கார வைத்தார்கள்.

இப்படி நந்தா, ரமணா இருவராலும் மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டேன். அதனால்  உடனே ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்துவிட்டேன்.

இப்போதும் விஷாலுக்கு ஆதரவு தருகிறேன். ஆனால் எனக்கு நேர்ந்த அவமானங்களை பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அவர் கூறினார்.