வாவ்.. எவ்ளோ அழகு! சுத்தி போட்ருங்க! பாபா பாஸ்கர் வீட்டில் நடந்த விசேஷம்! வைரலாகும் புகைப்படங்கள்!!

வாவ்.. எவ்ளோ அழகு! சுத்தி போட்ருங்க! பாபா பாஸ்கர் வீட்டில் நடந்த விசேஷம்! வைரலாகும் புகைப்படங்கள்!!


papa baskar daughter function photo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு  மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பாபா பாஸ்கர். அந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளிகளுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் அனைவரையும்  வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமான அவர் அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தை இயக்கியும் உள்ளார். பாபா பாஸ்கர் அவர்கள் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

papa baskar

இந்த நிலையில் அண்மையில் பாபா பாஸ்கர் வீட்டில் விசேஷம் நடைபெற்றுள்ளது. அதாவது அவரது மகளுக்கு மஞ்சள் புனித நீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்த நிலையில் அது வைரலாகி வருகிறது. அதனை கண்ட நெட்டிசன்கள் வாவ் எவ்வளவு அழகு, சுத்தி போட்ருங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.