கொடைக்கானலில் குதூகளிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.!PandianStoresfamilyinKodaikanal

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018-ஆம் வருடம் முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இந்த தொடரின் முதல் பாகம் முடிவடைந்த நிலையில், தற்போது 2-ம் பாகம் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த தொடரின் முதல் பாகத்தில் ஸ்டாலின், குமரன் தங்கராஜன், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல இந்த தொடரின் முதல் பாக கதைக்களம் அண்ணன், தம்பி பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. 2-ம் பாகத்தை தந்தை மகன்களுக்கு இடையிலான பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுத்துள்ளனர். இந்த தொடரில் முதல் பாகத்தில் மூத்த அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது கண்டிப்பான தந்தையாக நடித்து வருகிறார்.

Pandianstoresமேலும் அவருக்கு ஜோடியாக தனம் கதாபாத்திரத்தில் நடிகை நிரோஷா நடித்து வருகிறார். முதல் பாகத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஹேமா அதே கதாபாத்திரத்தில் தொடர்கிறார். அவருக்கு ஜோடியாக செந்தில் என்ற கதாபாத்திரத்தில் வசந்த் நடித்து வருகிறார்.

Pandianstores

கதைப்படி அண்மையில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தான் குடும்பத்தோடு ஹனிமூன் செல்லும் காட்சிகள கொடைக்கானல் பகுதியில் எடுக்கப்பட்டு வருகிறது. அது குறித்த புகைப்படங்களை நடிகர் வசந்த் சமூக வலைதளங்களில் பதிவிட்டார் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.