Pandian Stores Promo: அக்காவுக்கு கேன்சர்.. குடும்பத்திடம் உண்மையை கூறும் மீனா; கண்ணீரில் கதறப்போகும் குடும்பம்..!

Pandian Stores Promo: அக்காவுக்கு கேன்சர்.. குடும்பத்திடம் உண்மையை கூறும் மீனா; கண்ணீரில் கதறப்போகும் குடும்பம்..!



Pandian stores Promo 2 July 2023 

 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் - தம்பிகளின் பாசப்பிணைப்பை மையமாக வைத்து இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

கடந்த வாரம் வரை கலகலப்புடன் இருந்த தொடர், தனத்திற்கு திடீரென மார்பக புற்றுநோய் உறுதி செய்யப்பட்டு வருத்தத்தை தந்துள்ளது. தனமும் தனது ஆசையான ஐஸ்வர்யாவுக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கிறார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மார்பக புற்றுநோய் உண்மையை அறிந்துகொண்ட மீனா, அதனை குடும்பத்திடம் எடுத்துரைத்து முறைப்படி தனத்தை அறுவை சிகிச்சைக்கு தயாராக்க முயற்சி செய்கிறார். 

தனம் இறுதிவரை குடும்பத்தினரிடம் உண்மையை கூறவேண்டாம் என மன்றாட, மீனா கட்டாயம் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்காமல் எதையும் செய்ய கூடாது என உண்மையை கூற வருகிறார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இதனால் அடுத்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போகும் நிகழ்வு என்ன என்பதை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.