பாண்டியன் ஸ்டோர்ஸ் ரீல் ஜோடி ரியல் ஜோடியாக போறாங்களா.. யார் தெரியுமா.?

பாண்டியன் ஸ்டோர்ஸ் ரீல் ஜோடி ரியல் ஜோடியாக போறாங்களா.. யார் தெரியுமா.?


Pandian stores acters posted about their love

சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் மட்டுமே ஒன்றாக நடித்துவிட்டு பின் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர். அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ சீரியலில் நடித்து வரும் கண்ணன், ஐஸ்வர்யா ஜோடியும் ஒருவர்.

Vijaytv

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் தற்போது பிரபலமான சீரியல்களாக பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர் போன்ற சீரியல்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் அண்ணன் தம்பி குடும்ப கதையை காட்டும் சீரியல் தான்  பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் கடைசி தம்பியாக நடித்திருக்கும் கண்ணன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இவர்கள் நிஜ வாழ்க்கையில் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இவர்கள் இருவரும் இணைந்து ரீல் செய்து வெளியிடுவது உண்டு.

Vijaytv

இது போன்ற நிலையில், தற்போது கண்ணன் ஐஸ்வர்யா இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். இச்செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.