நிஜத்திலும் கர்ப்பமாக இருக்கும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை! கணவருடன் வெளியிட்ட க்யூட் புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள்!!

நிஜத்திலும் கர்ப்பமாக இருக்கும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை! கணவருடன் வெளியிட்ட க்யூட் புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள்!!


pandavar-illam-serial-actress-anu-got-pregnant

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ஆபீஸ் தொடரில் நடித்ததன் மூலம் நாயகியாக தனது பயணத்தை தொடங்கியவர் அனு. இவர் விஜய் தொலைக்காட்சி மட்டுமின்றி சன், ஜீ தமிழ் உள்ளிட்ட  பல டாப் சேனல்களில் ஒளிபரப்பான பிரபல தொடர்களிலும் நடித்துள்ளார்.

நடிகை அனு தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வருகிறார். அவர் அதில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாண்டவர் இல்லம் தொடரில் அவர் தற்போது கர்ப்பிணியாக நடித்து வருகிறார். 

நடிகை அனு விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் சந்தோசமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது நடிகை அனு நிஜத்திலும் கர்ப்பமாக உள்ளாராம். தற்போது நான்கு மாதம் நடைபெறுகிறதாம். இதனை அவர் மகிழ்ச்சியாக பகிர்ந்த நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.