சினிமா

உன் மகள் அழுகிறாள் ணா.. கொரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகர்! இயக்குனர் பா ரஞ்சித் வெளியிட்ட கண்கலங்க வைக்கும் பதிவு!!

Summary:

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி,கில்லி உள்ளிட்ட படங்களில் அவரது நண

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி,கில்லி உள்ளிட்ட படங்களில் அவரது நண்பனாக சிறு வேடங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் நடிகர் மாறன். மேலும் அவர் டிஷ்யூம், தலைநகரம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என பல படங்களில் நடித்துள்ளார்.

செங்கல்பட்டு நத்தம் பகுதியை சேர்ந்த இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு நடிகர் மாறன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்  இயக்குனர் பா ரஞ்சித் மாறன் தனது படத்தில் மாஞ்சா கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த புகைப்படத்தை வெளியிட்டு,கடக்க முடியாத துயரம்..எப்போதும் கட்டுகடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தை கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள் ணா!! என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை!! நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள் !! என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.


 


Advertisement