சினிமா

என்னையும் கைது செய்யுங்க... ஷாக் கொடுத்த நடிகை ஓவியாவின் பதிவு! ஏன், இப்ப என்ன பிரச்சனை பார்த்தீர்களா??

Summary:

பிரபல நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை  ஓவ

பிரபல நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை  ஓவியா, தற்போது என்னையும் கைது செய்யுங்கள் என்ற ஹேஷ்டாக்கை பகிர்ந்து மோடி அரசுக்கு எதிராக வெளியிட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நமது குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள் என பிரதமர் மோடிக்கு எதிராக கேள்வி எழுப்பும் வகையில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்த போஸ்டர் ஒட்டிய 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ததை கண்டித்து #ArrestMetoo என்ற ஹேஷ்டாக் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஓவியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில், இது ஜனநாயகம்தானா? என கேள்வி எழுப்பியதோடு, என்னையும் கைது செய்யுங்கள் என பொருள்படும் #ArrestMetoo என்ற ஹேஷ்டாக்கை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement