சினிமா

அட.. இதைத்தானே எதிர்பார்த்தோம்! ஓ மணப் பெண்ணே குறித்து வெளியான அசத்தலான தகவல்! குஷியான ரசிகர்கள்!!

Summary:

அட.. இதைத்தான் எதிர்பார்த்தோம்! ஓ மணப் பெண்ணே குறித்து வெளியான அசத்தலான தகவல்! குஷியான ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாண். பின்னர் வெள்ளித்திரையில் களமிறங்கிய அவர் தொடர்ந்து காதல் திரைப்படங்களில் நடித்து தற்போது இளம்பெண்களின் கனவு கண்ணனாக வலம் வருகிறார்.

நடிகர் ஹரீஷ் கல்யாண் தற்போது
 கார்த்திக் சந்தர் இயக்கத்தில் ஓ மணப் பெண்ணே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த பெல்லி சூபுளு என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் ஹீரோயினாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவி தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

காதல் திரைப்படமான ஓ மணப் பெண்ணே நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது ஓ மணப்பெண்ணே திரைப்படம் வருகிற அக்டோபர் 22ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


Advertisement