சினிமா

இதை பற்றி யோசிக்க கூட நேரம் இல்லை. ஒருநாள் கூத்து நடிகை நிவேதா பெத்துராஜ் அதிரடி!

Summary:

No time for love actress nivetha pethuraj

ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ், அதை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் பொதுவாக ஏன் மனசு தங்கம் திரைப்பதில் நடித்திருந்தார்.

அவரது நடிப்பல் கடைசியாக வெளியான டிக் டிக் டிக் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனக்கு காதலர் அமையவில்லை என்றும், மேலும் அதைப் பற்றி யோசிக்க கூட தனக்கு நேரமில்லை என்றும் கூறியிருக்கிறார் நிவேதா.

பார்ட்டி படத்தில் தற்போது நடித்து முடித்திருக்கிறார். அடுத்து விஷ்ணு விஷால் ஜோடியாக ஜெகஜால கில்லாடி, விஜய் ஆண்டனி ஜோடியாக திமிரு புடிச்சவன், பிரபு தேவாவுடன் பொன்.மாணிக்கவேல் என்று பிசியாக இருக்கிறார். இவை தவிர தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அவரிடம் அவரது காதலர் பற்றி கேட்டபோது ’இன்னும் அமையவில்லை.

இந்தி கதாநாயகிகளிடம் கேட்பது போல் எங்களிடம் கேட்டால் எப்படி? நமது சூழல் வேறு. காதலர் பற்றி யோசிக்க கூட எனக்கு நேரம் இல்லை. இதுதான் உண்மை என்றார்.


Advertisement