சினிமா

பொழுதை கழிக்கவே கோவா சென்றேன்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டாப்ஸி.

Summary:

நடிகை டாப்சி, பேட்மிண்டன் வீரர் மாத்தியூசுடன் ரகசியமக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் பரவ தொடங்கின. 

நடிகை டாப்சி தமிழில் ‘ஆடுகளம்’ படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் டாப்சி. அதையடுத்து பல படங்களில் நடித்தார். பின்னர் போதிய வாய்ப்பு தமிழில் இல்லாததால் பாலிவுட் சென்றார். தற்போது அங்கு அவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

taapsee க்கான பட முடிவு

இந்நிலையில் நடிகை டாப்சி சமீபத்தில் குடும்பத்தினருடன் கோவா சென்றிருந்தார். அங்கு காதலர் மாத்தியூசும்  குடும்பத்துடன் வந்திருந்தார். எளிமையாக நடந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், ரகசியமாக நடந்த நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்கவே இவர்கள் கோவா சென்றதாக கூறப்பட்டது.

taapsee க்கான பட முடிவு

இதற்கு நடிகை டாப்ஸி மறுப்பு தெரிவித்துள்ளார். யாருடனும் எனக்கு நிச்சயத்தார்த்தம் நடக்கவில்லை. நான் குடும்பத்தினருடன் பொழுதை கழிக்க கோவா சென்றேன். அதை பலர் தப்பாக செய்தி பரப்பி வருகின்றனர்’’ என்றார் டாப்சி. 


Advertisement