9 ஆண்டுகளை நிறைவு செய்த பிரேமம்; ஆழமான காதலை வெளிப்படுத்திய கூஸ்பெம்ப்ஸ் திரைப்படம்.!!Nivin Pauly Starring premam Movie Completed 9 years 

 

கடந்த 2015 ம் ஆண்டு நடிகர்கள் நிவின் பாளி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் பிரேமம் (Premam). 

இப்படம் தமிழ் மொழியில் வெளியாகவில்லை என்றாலும், படத்தில் இடம்பெற்ற காதல், கல்லூரி வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை தனிநபரின் வாழ்க்கையில் பிரதிபலித்து காணப்பட்டதால் பலராலும் வரவேற்கப்பட்டது. 

இதையும் படிங்க: மிரட்டல் லுக்.. பாபி சிம்ஹா, யோகிபாபு நடிக்கும் "நான் வயலன்ஸ்" படத்தின் அசத்தல் பர்ஸ்ட் லுக் உள்ளே.!

Premam movie

தமிழக இளைஞர்களிடம் வெற்றிபெற்ற திரைப்படம்

மொழிமாற்றம் செய்யப்படாமல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த படமாக இப்படம் இருந்தது. அல்போன்ஸ் புத்திரன் இயக்கம் மற்றும் எடிட்டிங்கில் படம் உருவாகி இருந்தது. 

இளைஞர்களின் மனதில் தீராத தாக்கத்தை ஏற்படுத்திய இப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. படத்தில் நடித்திருந்த நாயகிகளில் சாய்பல்லவி, மடோனா, அனுபமா ஆகியோர் இன்று புகழின் உச்சத்திற்கு சென்று இருக்கின்றனர்.

இதையும் படிங்க: ஸ்ருதிஹாசனிற்கு என்ன ஆச்சு.! இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் குழப்பம்.!?