மிரட்டல் லுக்.. பாபி சிம்ஹா, யோகிபாபு நடிக்கும் "நான் வயலன்ஸ்" படத்தின் அசத்தல் பர்ஸ்ட் லுக் உள்ளே.!non-violence-2024-tamil-movie-first-look-out-now

 

மெட்ரோ, கோடியில் ஒருவன் ஆகிய திரைப்படங்களை இயக்கி வழங்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், ஏகே பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நான் வயலன்ஸ் (Non Violence).

இப்படத்தின் இசையமைப்பு பணிகளை யுவன் சங்கர் ராஜா மேற்கொண்டு இருக்கிறார். என்எஸ் உதயகுமார் ஒளிப்பதிவில், என்பி ஸ்ரீகாந்த் எடிட்டிங்கில், மகேஷ் மெத்திவ் சண்டை பயிற்சியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.

இதையும் படிங்க: ஸ்ருதிஹாசனிற்கு என்ன ஆச்சு.! இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் குழப்பம்.!?

பர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில், நடிகர்கள் ஹரிஷ், பாபி சிம்ஹா, யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். விரைவில் படம் திரைக்கு வருகிறது. 

இந்நிலையில், இன்று படத்தின் முதற்பார்வை போஸ்டர் வெளியாகுவதாக அறிவிப்பட்டு இருந்தது. பல மொழிகளில் படம் வெளியாகவிருப்பதால் கன்னட நடிகர் சிவராஜ் குமார், இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமையாளர் தமன் உட்பட பலரும் போஸ்டரை வெளியிட்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: "அடுத்த விஜயகாந்த் இவருதான்" - 150க்கும் மேற்பட்ட உயிர்களை தத்தெடுத்த KPY பாலாவை பாராட்டும் நெட்டிசன்கள்.!!