படப்பிடிப்பில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிவின் பாலி !!Nivin pauly escaped from crocodile

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் மோகன்லால் நடித்துவரும் மலையாள திரைப்படம் "காயம்குளம் கொச்சுன்னி". படப்பிடிப்பின்போது நிவின் பாலி காயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்தப்படத்தில் ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏற்கனவே அமலாபால் இந்த படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. 

kayankulam kochini

இந்நிலையில் சில காட்சிகளை படமாக்க இலங்கை சென்றுள்ளது படக்குழு. அங்குள்ள ஒரு ஏரியில் குதித்து நிவின் பாலி நீந்தி வரும் காட்சி படமாக்கப்பட்டது. 

kayankulam kochini

ஏரி பகுதிக்கு சென்ற பிறகு தான் அங்கு சுமார் 300 முதலைகள் இருப்பது தெரிய வந்தது. சப்தம் போட்டு முதலைகளை விரட்டி விட ஒரு குழு அமைக்கப்பட்டது. அவ்வாறு விரட்டப்பட்டும் நிவின் பாலி தண்ணீரில் இறங்கியதும் 3 முதல் 4 முதலைகள் அவரை நெருங்கி வந்துள்ளன. நல்ல வேளையாக அங்கு எந்த அசம்பாவிதமும் நடக்காமல் அவர் பத்திரமாக கரைக்கு திரும்பியுள்ளார்.