சினிமா

சின்ன வயசுல எனக்கும் அந்த பழக்கம் இருந்துச்சு! ஓப்பனாக ஒப்புக்கொண்ட பிரபல நடிகை!

Summary:

Nivetha pethuraj talks about her childhood memories

ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை தந்ததை அடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என் மனசு தங்கம், சமீபத்தில் விஜய் சேதுபதியின் சங்க தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார் அம்மணி. இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் பார்ட்டி, ஜெகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்வி பதிலளித்துள்ளார் நிவேதா. அதில், தனது குழந்தை பருவ நிகழ்வை அவர் பகிர்ந்துள்ளார். ரசிகர் ஒருவர் தான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது சாக்பீஸ்களை திருடுவதாக குறிப்பிட்டிருந்தார்.

தனக்கும் சின்னவயதில் அந்த பழக்கம் இருந்ததாகவும், சாக்பீஸ்களை திருடிகொண்டுவந்து தனது அம்மாவிடம் கொடுத்து கோலம் போட சொன்னதாகவும் கூறியுள்ளார் நிவேதா.


Advertisement