ஒருநாள் கூத்து நிவேதா பெத்துராஜின் அடுத்த படம் மற்றும் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

ஒருநாள் கூத்து நிவேதா பெத்துராஜின் அடுத்த படம் மற்றும் கதாபாத்திரம் என்ன தெரியுமா?


Nivetha pethuraj in thatam Telugu remake

ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்ததை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்தது.

ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன், போன்ற படங்களில் நடித்தார். டிக் டிக் டிக் படத்தில் ராணுவ அதிகாரியாகவும், திமிரு புடிச்சவன் படத்தில் காக்கி சட்டை அணிந்து காவல் துறை அதிகாரியாகவும் நடித்திருந்த நிவேதா மீண்டும் காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளார்.

Nivetha pethuraj

அருண் விஜய் நடிப்பில் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார் நிவேதா. தமிழில் நாயகி சீரியலில் ஆனந்தியாக நடித்துவரும் வித்யா பிரதீப் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.