அட.. திருமணத்திற்கு தயாரான மெர்சல் நாயகி.! மாப்பிள்ளை யாரு? வெளிவந்த சூப்பர் தகவல்!!

அட.. திருமணத்திற்கு தயாரான மெர்சல் நாயகி.! மாப்பிள்ளை யாரு? வெளிவந்த சூப்பர் தகவல்!!


nithyamenon-marriage-details-viral

தமிழில் சித்தார்த்துடன் இணைந்து 180 படத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். கொழுகொழுவென பப்லியாக இருக்கும் நடிகை நித்யாமேனன் விஜய்யின்  மெர்சல், விக்ரமுடன் இருமுகன், காஞ்சனா 2, துல்கர் சல்மானுடன் ஓகே கண்மணி மற்றும் சைக்கோ படங்களில் தனது எதார்த்தமான  நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். 

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது மலையாளத்தில் 19 (1)(a) என்னும் படத்திலும், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நித்யாமேனன் திருமணம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Nithya menon

அதாவது நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும், அவர் மலையாள டாப் ஹீரோவை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து நித்யா மேனன் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும் இது காதல் திருமணம் எனவும், பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.