யோகிபாபு படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய நித்யானந்தா.! வைரலாகும் சர்ச்சை புகைப்படம்!!

யோகிபாபு படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய நித்யானந்தா.! வைரலாகும் சர்ச்சை புகைப்படம்!!


nithyamantha complaint on yogibabu movie

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் தற்போது அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளவர் யோகி பாபு. அஜித், விஜய் என் முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் யோகி பாபு சிறிய பட்ஜெட் படங்களிலும், எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்து வருகிறார்.

யோகி பாபுவிற்கு தற்போது நிறைய படங்கள் கை வசம் உள்ளன. பிரபல ஹீரோக்களுடன் காமெடி நடிகராகவும், பிரபல நடிகைகளை காதலிக்கும் மன்மதனாகவும், குழந்தைகளுக்கு பிடித்தமான நகைச்சுவை வேடங்களையும் ஏற்று தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளவர் யோகி பாபு.இந்நிலையில் தற்போது ஜெயம் ரவியுடன் நடித்து வெளிவந்த படம் தான் கோமாளி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

yogibabu

இந்நிலையில் யோகிபாபு தற்போது பப்பி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகும் இப்படத்தை வனமகன், போகன் படங்களை இயக்கிய நட்டு தேவ் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜானிசின்ஸ் என்ற ஆபாச நடிகர் புகைப்படம் ஒருபக்கமும்  நித்தியானந்தா புகைப்படம் மற்றொரு பக்கத்திலும் இருந்தது.இது பெரும் சர்ச்சையை கிளப்பிய சிவசேனாவை சேர்ந்த செல்வம் என்பவர் இதுகுறித்து கமிஷனரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

yogibabuஅமெரிக்காவில் ஆபாச நிர்வாண படங்களில் நடிக்கும் ஜானி சின்ஸ் என்பவருடன் இந்து மத பிரசாரங்கள், போதனைகள் வழங்கி வரும் சுவாமி நித்தியானந்தாவை  இணைத்து போஸ்டர் வெளியிட்டுள்ளது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், இளைஞர் மனதில் வக்கிர எண்ணங்களை ஏற்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது. இந்நிலையில் பப்பி படக்குழு  மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.