ரொம்ப கஷ்டமா இருந்துச்சு! இன்னும் அதை மறக்க முடியலை! நடிகை நித்யா மேனனை காயப்படுத்திய சம்பவம்!!

ரொம்ப கஷ்டமா இருந்துச்சு! இன்னும் அதை மறக்க முடியலை! நடிகை நித்யா மேனனை காயப்படுத்திய சம்பவம்!!


nithya-menan-shares-her-cinema-experience

தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 180 படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். அதனை தொடர்ந்து அவர் மெர்சல், இருமுகன், காஞ்சனா 2,  ஓகே கண்மணி, சைக்கோ என பல படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவரது கைவசம் தமிழில் இரு படமும், தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.

இந்நிலையில் அவர்  அண்மையில் பேட்டி ஒன்றில் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அப்பொழுது அவர், 10 வருடங்களுக்கு முன் நான் முதன்முதலாக தெலுங்கு படத்தில் நடித்தபோது பிரபாஸ் பற்றி என்னிடம் கேட்டனர். அப்போது நான் பிரபாஸ் யார் என்று தெரியாது என பதிலளித்தேன். அது பெரும் சர்ச்சையானது. ரசிகர்கள் என்னை பயங்கரமாக விமர்சனம் செய்தனர். சினிமா துறையில் நுழைந்த எனக்கு விழுந்த பெரிய அடி அது. இந்த சம்பவம் என்னை மிகவும் காயப்படுத்தியது.

Nithya menan

 தற்போது வரை அதை என்னால் மறக்க முடியாது. சிறு வயதிலிருந்தே போட்டி என்றால் எனக்கு ரொம்ப பயம். நான் டாப் ஹீரோயினாகனும் என்றெல்லாம் எப்பவும் நினைத்ததில்லை. இப்படியே எனக்கு நன்றாகதான் இருக்கிறது. எனக்கு கிடைத்ததை வைத்து சந்தோஷமாக இருக்க தெரியும். பிடித்ததை நல்லபடியாக செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.