சினிமா

என்னா ஸ்டைலு! தாடி பாலாஜி மனைவி நித்யாதானா இது! ஆள் அடையாளமே தெரியாம வேற லெவலில் இருக்காரே!!

Summary:

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்ததன்

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறுசிறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் தாடி பாலாஜி. பின்னர் விஜய் தொலைக்காட்சியில் களமிறங்கிய அவர் பல நிகழ்ச்சிகளில் காமெடியில் கலக்கி வந்தார். தாடி பாலாஜியின் மனைவி நித்யா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். 

இந்த நிலையில் சில ஆண்டுகளிலேயே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனிதனியே வாழ்ந்து வருகின்றனர். மேலும் போஷிகா தனது அம்மா நித்யாவுடன் வசித்து வருகிறார். இதற்கிடையில் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டனர். அப்பொழுது இருவரையும் சமரசம் செய்ய பல வேலைகள் நடந்தது. ஆனால் அதில் எந்த பலனும் இல்லை.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நித்யா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். தற்போதும் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு செம ஸ்டைலிஷாக மாறிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.


Advertisement