"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
தாடி பாலாஜி மீது நித்யா அதிரடி புகார்! சமாதானம் ஆன நிலையில் மீண்டும் தொடங்கிய கலவரம்.!
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் காமெடி நடிகராகவும், பிரபல தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருபவர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இவர்கள் கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு கமல்ஹாசன் உட்பட அனைவரின் அறிவுரையாலும் அவர்கள் மீண்டும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் நித்யா நேற்று மாதவரம் காவல் நிலையத்தில் தாடி பாலாஜி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னுடைய கணவன் தாடி பாலாஜி மீண்டும் குடித்துவிட்டு தன்னையும் மகளையும் துன்புறுத்துகிறார் மற்றும் அவரது நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து ஆபாச வார்த்தைகளில் என்னை திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.
தான் தற்போது புதிய பெண்கள் இயக்கம் என்ற அமைப்பில் தலைவியாக உள்ளேன். அவற்றை விட கூறி பாலாஜி என்னை கொடுமைப்படுத்துகிறார். அவரும், அவரது நண்பர்களும் என்னைப்பற்றி தவறாக வாட்ஸ் அப் குரூப்பில் பதிவு செய்து என்னை அவமானப்படுத்துகின்றனர்.
இதனால் நான் மிகவும் கவலை அடைநது மனமுடைந்துள்ளேன் என புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.