எனக்காக கட்டிய கோவிலை அதற்காக பயன்படுத்துங்க! ரசிகர்களுக்கு சிம்பு பட நடிகை விடுத்த வேண்டுகோள்!

எனக்காக கட்டிய கோவிலை அதற்காக பயன்படுத்துங்க! ரசிகர்களுக்கு சிம்பு பட நடிகை விடுத்த வேண்டுகோள்!


nidhi-agarwal-reguest-to-fan-about-temble

பாலிவுட்டில் முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். டான்ஸரும் சிறந்த மாடலுமான அவர் தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்தார். ஆனால் அப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியடையவில்லை. பின்னர் தமிழில் களமிறங்கிய அவர் சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதனை தொடர்ந்து ஜெயம் ரவியின் பூமி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவ்வாறு தமிழில் இரு படங்களில் மட்டுமே நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு  காதலர் தின பரிசாக அவரது ரசிகர்கள் சென்னையில் கோயில் கட்டி, சிலை வைத்து அதற்கு அபிஷேகம் செய்து ஆரத்தி எடுத்து கும்பிட்டுள்ளனர். இது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து கேள்விப்பட்ட நடிகை நிதி அகர்வால் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

nidhi agarwal

அதில், ரசிகர்கள் என் மீது  வைத்திருக்கும் உண்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பை கண்டு மிகவும் நெகிழ்ந்து போயுள்ளேன். எப்போதும் அவர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். எனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நிறைய உதவிகளை செய்து வருகின்றனர் என்பது பாராட்டக்கூரிய விஷயம். மேலும் எனக்காக கட்டியுள்ள கோயிலை, ஏழைகள் தங்க, உணவளிக்க, கல்விக் கூடமாக பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.