
news viral about losliyaa
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
மேலும் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் 15 போட்டியாளர்களுள் ஒருவராக இலங்கையை சேர்ந்த பிரபல செய்திவாசிப்பாளரான லாஸ்லியா கலந்துகொண்டுள்ளார். அவர் மிகவும் ஜாலியாக சுற்றி திரிகிறார். மேலும் அவரது பந்தா இல்லாத பேச்சிற்கும், மற்றவர்களை பற்றி புறம் பேசாத குணத்திற்கும் லாஸ்லியாவிற்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும் லாஸ்லியா ஆர்மியும் உருவானது.
இந்நிலையில் சோப்ரா என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் லாஸ்லியாவுடன் பள்ளியில் படித்தவர் எனவும், அவர் மிக மோசமானவர். இனிமேல் தான் அவரது சுயரூபம் தெரியும் எனவும் பதிவிட்டுள்ளார்.
மேலும் லாஸ்லியாவிற்கு திருமணம் நடந்துவிட்டது, அவர் கணவரை விவாகரத்து செய்துவிட்டார் எனவும் கூறியுள்ளார். இது வைரலான நிலையில் இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
#fakelosliya pic.twitter.com/V07tfWkyyC
— BiggBoss Reviews (@ReviewsBiggboss) 4 July 2019
Advertisement
Advertisement