ஐயோ.. கல்யாணமாகி 6 மாசம்தானே ஆச்சு! திடீரென வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்! கதறி துடிக்கும் குடும்பத்தார்கள்!!

ஐயோ.. கல்யாணமாகி 6 மாசம்தானே ஆச்சு! திடீரென வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்! கதறி துடிக்கும் குடும்பத்தார்கள்!!


newly-married-man-drowned-into-the-water-and-died

திருமணமான 6 மாதத்திலேயே, தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள எலசட்டி என்னும் கிராமத்தில் வசித்து வந்தவர் வெங்கடேஷ். 35 வயது நிறைந்த இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில் வெங்கடேஷ் அண்மையில் தனது நண்பர்கள் சீனிவாச ரெட்டி, நாகேஷ் ஆகியோருடன் இணைந்து பாப்பிரெட்டி பாளையத்தில் உள்ள ரவீந்திரன் என்பவரது விவசாய சொட்டுநீர் பாசன தண்ணீர் தொட்டியில் நீச்சல் பழகி கொண்டிருந்துள்ளார். அப்பொழுது சற்றும் எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நொடியில் வெங்கடேஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.  

பின்னர் இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த அவர்கள் வெங்கடேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் திருமணமான 6 மாதத்திலேயே உயிரிழந்த வெங்கடேஷின் உடலை கண்ட குடும்பத்தினர் கதறி துடித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.