சினிமா

தர்பாரில் இதுதான் ஹைலைட்டே.! படம் குறித்த செம மாஸான தகவலை வெளியிட்ட முக்கிய பிரபலம்!! குஷியான ரசிகர்கள்!!

Summary:

new update leaked about tharbaar movie

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். மும்பை போலீசாக ரஜினி நடிக்கும் இந்த படத்தினை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சு பாஸ்கரன் தயாரிக்க, இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்குகிறார். 

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக,  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார்.மேலும் இவர்களுடன் நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறார்.சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக இருக்கும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

tharbaar movie க்கான பட முடிவு

தர்பார் படத்தின் படபிடிப்பு, மும்பையில் மிகவும்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தர்பார் படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தர்பார் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,  ஒரே ஷாட்டில் ரஜினி-நயன்தாரா  நடித்த ஒரு நீண்ட காட்சிதான் ஹைலைட்டே  பாட்டின் இறுதியில், பிருந்தா அருமையாக வழிநடத்தியுள்ளார் என பதிவு செய்துள்ளார்.


Advertisement