சினிமா

வெளியான கைதி பட 2வது போஸ்டர்; வைரலாகும் வெறித்தனமான கார்த்தியின் தோற்றம்.!

Summary:

new tamil movie - kaithi 2nd look - vairal krthi poster

தேவ் படத்தை அடுத்து கைதி என்ற படத்தில் நடித்துவருகிறார் கார்த்தி. தேவ் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இந்நிலையில் மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் இயக்கத்தில் தற்போது கைதி படத்தில் கார்த்தி நடித்துவருகிறார். படப்பிடிப்பு வேலைகள் தொடங்கி விரைவாக நடைபெற்று வருகிறது.

ஹீரோயின், ரொமான்ஸ், டூயட் இல்லாமல் உருவாகும் இந்த படம் ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. படத்தில் கார்த்தி கைதியாக நடிப்பதாகவும், அதற்காத்தான் கைதி என பெயர் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இரத்தம் சொட்ட சொட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வித்தியாசமாக உருவாக்கி இருந்தனர் படக்குழுவினர். தற்போது வெளியான இரண்டாவது போஸ்டரில் நடிகர் கார்த்தி மிகவும் ஆக்ரோஷமாக காணப்படுகிறார். மேலும், கைதி படத்தின் டீசர் வரும் 30ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

 


Advertisement