தமிழகம் சினிமா

பல சினிமா பிரபலங்களுடன் வெளிவரவுள்ள புதிய சீரியல்! உச்சகட்ட குஷியில் காத்திருக்கும் ரசிகர்கள்!

Summary:

new serial in sun tv


 இந்திய தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தொலைக்காட்சி தான். சன்டிவியின் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலும் சினிமாவை போலவே பிரமாண்டமாக ஒளிபரப்புகின்றனர். 

ஒருகாலத்தில் இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்துவந்த நிலையில் இன்று அணைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பல்வேறு தொடர்களை ஒளிபரப்பி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

சன்டிவியில் தான் சினிமா பிரபலங்கள் பலர் நடித்துவருகின்றனர். ராதிகா, ரம்யாகிருஷ்ணன், தேவையணி உள்ளிட்ட பிரபலங்கள் சன்டிவி சீரியலில் நடித்தனர். தற்போது நடிகை குஷ்பு, ரேவதி போன்ற நடிகைகளும் சன்டிவி சீரியல்களில் நடித்துவருகின்றனர்.

சமீபத்தில் தொடங்கிய "ரன்" சீரியலை தல அஜித்தை அறிமுகமாக்கிய இயக்குனர் செல்வா இயக்கிவருகிறார். அந்த தொடரின் ஒவ்வொரு எபிசோடும் சினிமாவை போலவே பிரமாண்டமாக ஒளிபரப்பிவருகின்றனர். இந்தநிலையில் சன்டிவியில் விரைவில் புத்தம்புதிய "ராசாத்தி" என்ற சீரியலை ஒளிபரப்ப உள்ளனர்.

அதற்கான புரோமோவையும் வெளியிட்டுள்ளனர். அந்த தொடரில் விஜயகுமார், நகைச்சுவை நடிகர் செந்தில், பொள்ளாச்சி பாபு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். கிராமத்து வாசனையுடன் வெளியாகியுள்ளது அந்த புரோமோ. இந்த தொடரை காண ஏராளமான ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.


Advertisement