சினிமா

சன்டிவியில் முக்கியமான சீரியல் நிறைவு பெறுகிறது! அதற்கு பதிலாக வரும் புதிய சீரியல்!

Summary:

new serial in sun tv


இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த வளர்ச்சிக்கு அதில் ஒளிபரப்பாகும் தொடர்களும், நிகழ்ச்சிகளும்தான் . குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. பல முன்னணி பிரபலங்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்துவருகின்றனர்.

இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் இதுவரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த சந்த்ரகுமாரி தொடரில் சமீபத்தில் அடுத்தடுத்த பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றது. இரவு 9:30 மணிக்கு  ஒளிபரப்பாகிவந்த இந்த தொடர் சமீபத்தில் மாலை 6:30 மணிக்கு மாற்றப்பட்டது.

இந்தநிலையில் சந்திரகுமாரி சீரியலின் நேரம் மாற்றப்பட்டதில் இருந்து சந்தரகுமாரி சீரியலை தயாரித்து, நடித்துவரும் ராதிகா எந்த ஒரு காட்சியிலும் நடிக்காமல் சந்த்ரகுமாரி சீரியலை விட்டு வெளியேறினார்.  அவரது இடத்திற்கு பிரபல நடிகை விஜி சந்திராவாக நடித்தார்.

இந்தநிலையில், தற்போது சந்திரகுமாரி தொடர் நிறைவு பெறுவது போல தெரிகிறது. அடுத்த வாரத்தில் இருந்து மாலை 6:30 மணிக்கு  தமிழ்ச்செல்வி எனும் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான புரோமக்களையும் ஒளிபரப்பி வருகின்றனர். 


Advertisement