சினிமா

அட.. இவரா! ராஜாராணி தொடரிலிருந்து விலகும் முன்னணி பிரபலம்! அவருக்கு பதில் இனி யார்னு பார்த்தீங்களா!!

Summary:

அட.. இவரா! ராஜாராணி தொடரிலிருந்து விலகும் முன்னணி பிரபலம்! அவருக்கு பதில் இனி யார்னு பார்த்தீங்களா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜாராணி தொடரில் கார்த்தி மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இத்தொடரில் கணவன் மனைவியாக நடித்த அவர்கள் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.

மேலும் ஆலியா தற்போது விஜய் டிவியில் ராஜாராணி 2 தொடரிலும் ஹீரோயினாக சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அந்த தொடரில் ஹீரோவாக, சரவணனாக திருமணம் சீரியலில் நடித்து பிரபலமான சித்து நடித்து வருகிறார். ஆலியா தற்போது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் இம்மாதம் இறுதியில் குழந்தை பிறக்க உள்ள நிலையில் ஆலியா தற்காலிகமாக தொடரை விட்டு விலக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குழந்தை பிறந்த பிறகு சில காலங்களுக்கு பிறகு மீண்டும் அவரே சந்தியாவாக நடிக்க உள்ளாராம். இதற்கிடையில் புதிய சந்தியாவாக ரியா என்பவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.


    


Advertisement