37 வயதில் திருமணம் செய்துகொண்ட பெண்! 15 நாளிலேயே கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
37 வயதில் திருமணம் செய்துகொண்ட பெண்! 15 நாளிலேயே கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூர் பகுதியில் வசித்து வந்தவர் செல்லப்பன். 54 வயது நிறைந்த இவருக்கு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த சுலோச்சனா என்ற 37 வயது நிறைந்த பெண்ணுடன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் சுலோச்சனா நேற்று முன்தினம் இரவு திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே செல்லப்பன் அவரை மருத்துவமனைக்கு போகலாம் என அழைத்துள்ளார். ஆனால் அதற்கு சுலோச்சனா மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து வீட்டில் தூங்கிய சுலோச்சனா, நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக செல்லப்பன் போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள் சுலோச்சனாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
மேலும் இதுகுறித்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 15 நாளிலேயே புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.