சினிமா

மீண்டும் தொடங்கியது எங்க வீட்டு மாப்பிளை! இந்தமுறை யாருக்கு பெண் பார்க்கிறார்கள் தெரியுமா?

Summary:

New game show Pelli Choopulu starts in Telugu

கலர்ஸ் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பு எங்க வீட்டு மாப்பிள்ளை என்றொரு ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலமாகத் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கப் போவதாக அறிவித்திருந்தார் நடிகர் ஆர்யா, அதில் ஆர்யாவை திருமண செய்துகொள்ள விருப்பம் கொண்டு 7000 க்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பங்கள் அனுப்பியிருந்தனர்.அதில் இருந்து 16 பெண்களை ஆர்யா கலர்ஸ் தொலைக்காட்சி மூலமாகத் தேர்வு செய்திருந்தார்.

இந்த 16 பெண்களும் ஜெய்ப்பூர் சென்று ஆர்யாவுடன் தங்கி இருந்து ஒருவருக்கொருவர் பார்த்து பழகி யார் ஆர்யாவுக்கு வாழ்கை துணையாக  பொருத்தமானவர் என்பதை தேர்ந்தேடுத்து ஆர்யாவே நிகழ்ச்சியின் முடிவில் தெரிவிப்பதுடன் இந்த நிகழ்ச்சியின் குறிக்கோள்.

16 பெண்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி ஒருவழியாக 3 பெண்களுடன் இறுதிகட்டத்திற்கு  வந்தது.

இறுதியில் ஆர்யா யாரையும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை, ஒருவரை திருமணம் செய்ய சம்மதித்தால் மற்ற இருவருக்கும் மிகவும் கஷ்டப்படுவார்கள் என கூறினார்.

இதேபோல் நிகழ்ச்சி இப்போது தெலுங்கு சினிமாவில் தொடங்கப்பட்டுள்ளது. Pelli Choopulu என்று பெயரிடப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு 14 பெண்கள் தேர்வாகியுள்ளனர்.

பெண்கள் அனைவரும் யாரை மனக்க ஆசைப்பட்டு வந்துள்ளார்கள் தெரியுமா?. அவர் வேறு யாரும் இல்லை தெலுங்கு சினிமாவின் பிரபல தொகுப்பாளரான பிரதீப் மசிராஜுவை தான்.


Advertisement