நயன்தாராவின் குழந்தைகளை கிண்டல் செய்து, வம்பிழுக்கும் நெட்டிசன்கள்.. கடுப்பான நயன்தாரா.?



Netizens trolled nayanthara childrens

தமிழ்த் திரையுலகின் 'லேடி சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலிப்பதாகவும், திருமணம் செய்யப்போவதாகவும் முன்னதாக நிறைய செய்திகளில் அடிபட்டார் நயன்தாரா.

nayanthara

இந்நிலையில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன்தாரா, 2022 ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். 

திருமணமான 4 மாதங்களிலேயே, வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண்குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக இவர்கள் அறிவித்தார்கள். குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலக் என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார்கள்.

nayanthara

இந்நிலையில், ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது புகைப்படங்களை நயன்தாரா வெளியிட்டிருந்தார். அதைப் பார்த்த நெட்டிசன்கள், "11 மாதங்களில் குழந்தைகள் எப்படி இவ்வளவு வளர்ந்தார்கள். எதுவும் மெஷின்ல போட்டீங்களா? இல்ல மருந்து கொடுத்தீங்களா?" என்று நயன்தாராவை வம்பிழுத்துள்ளார்கள்.