பீஸ்ட் எந்த மாதிரியான படம்.. வேற லெவல் அப்டேட்டை வெளியிட்ட நெல்சன்! எகிறும் எதிர்பார்ப்பு!!

தளபதி விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இதற்கு முன்பு கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கியுள்ளார். விஜய்யின் 65வது படமான பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.
மேலும் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீஸ்ட் திரைப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இயக்குனர் நெல்சன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பீஸ்ட் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அவரது முந்தைய படங்களை போன்று இல்லாமல் வேறு மாதிரியான வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது. மேலும் கோலமாவு கோகிலா, டாக்டர் பட பாணியில் இருக்காது, வேறுபட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.