20 வருடங்களுக்கு பிறகு அக்காவான பாக்கியலட்சுமி சீரியல் நடிகை! தங்கச்சி பாப்பாவுக்கு என்ன பெயர் வச்சுள்ளார் பார்த்தீர்களா!!Neha menon sister naming ceremony

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற வாணி ராணி தொடரில் தேனு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நேஹா மேனன். இவர் பைரவி என்ற சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

அதனைத் தொடர்ந்து நேஹா  தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டாகி வரும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Neha menon

19 வயது நிறைந்த நேஹாவின் அம்மாவிற்கு கடந்த மாதம் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. தான் அக்காவான சந்தோஷத்தை அவரே மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் அந்த குழந்தைக்கு தற்போது பெயர் சூட்டு விழா நடைபெற்றுள்ளது. குழந்தைக்கு சாஹிதி என்று பெயரிட்டுள்ளனர்.  இதனை மிகவும் ஹேப்பியாக நேகா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.