
நீயா நானா நிகழ்ச்சியில் மனைவியை மட்டம் தட்டி பேசிய கணவர்..! மரண பயத்தை கண்முன் காட்டிய கோபிநாத்... வைரல் வீடியோ இதோ
விஜய் தொலைக்காட்சியின் இந்தவாரம் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கோபிநாத் தொகுத்துவழங்கும் நீயா நானா நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு.
வாரம் வாரம் புது புது டாபிக்குடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், இந்த வாரம் மனைவியை மற்றவர்கள் முன்பு மட்டம் தட்டும் கணவர்கள், ஆதங்கப்படும் மனைவிகள் என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோ காட்சியில், நபர் ஒருவர் தனது மனைவிக்கு கற்பூரம் கூட பற்ற வைக்க தெரியாது என்று கூறிய நிலையில், அவரை அனைவரது முன்னிலையில் நிறுத்திய கோபிநாத், கண்ணில் மரண பயத்தினைக் காட்டியுள்ளார்.
Advertisement
Advertisement