என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
ஹீரோக்களை மிஞ்சி ரவுடி போல் சிகரெட் பிடித்து போஸ் கொடுத்த நடிகை நஸ்ரியா! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. இதற்கு முன்பு பல மலையாள படங்களில் சிறுவயது முதல் நடித்து பிரபலமானவர். அதனை தொடர்ந்து நஸ்ரியா அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மேலும் பெருமளவில் பிரபலமானார். மேலும் அப்படத்தில் அவர் பேசிய பிரதர் என்னும் வார்த்தை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து நையாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் கொஞ்சம் படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம். நடிகை நஸ்ரியா சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ஃபகத் ஃபாஸிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதனை தொடர்ந்து அவர் சினிமாவை விட்டு முற்றிலும் விலகினார்.
இந்நிலையில் தற்போது நடிகை நஸ்ரியா தனது கணவருடன் இணைந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் நடிகை நஸ்ரியா சிகரெட் அடித்து கொண்டு ரவுடி போல போஸ் கொடுத்துள்ளார்.
Trance 🤪💕 pic.twitter.com/NF9zjoNRtv
— Nazriya Nazim (@Nazriya4U_) November 1, 2019