புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அட.. நடிகை நயன்தாராவா இது! கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் அம்மணி எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனை தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி,சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்த அவர் தற்போது தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கிறார்.
மேலும் அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் நயன்தாரா தற்போது ரஜினியின் அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவ்வாறு பல படங்களில் நடித்து ஹீரோக்களுக்கு இணையாக லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா சிறிதுகூட மேக்கப் இன்றி இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் தலைவி எப்பவும் அழகுதான் என வர்ணித்து வருகின்றனர்.